மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கராத்தே மாஸ்டர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கராத்தே மாஸ்டர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்
X

பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் ராஜா.

தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டரை பொதுமக்கள் சரமாரி தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கருமந்துறை பகுடுபட்டு கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கராத்தே மாஸ்ட்டராக வேலை பார்க்கும் ஆத்தூர் அருகே சீலயம்பட்டியை சேர்ந்த ராஜா (46) என்பவர் பள்ளியில் படித்த மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளி மலை வட்டம் கரியாலுர் பகுதியை சேர்ந்த கரியாலூர் அரசு பள்ளி தலைமையாசியராக பணியாற்றி வரும் ரவி என்பவரின் மகள் இந்த தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி கடந்த 22ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை முயற்ச்சிக்கு ஈடுபட்டுள்ளார்.

ஏதோ அலறல் சத்தம் கேட்டு தந்தையான ரவியும் அவரது மனைவியும் ஓடிச்சென்று அறைக்குள் பார்த்துள்ளனர். அப்போது மகள் கையில் கிழித்தவாறு சேலையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முன்றுள்ளார். பேச்சு நினைவில்லாமல் இருந்த மாணவியை மீட்டு உடனே அருகே அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்து கொண்டு பின்னர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவியுடன் உறவினர்கள் திரண்டு சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த மாணவியுடன் பெற்றோர்கள் வாழப்பாடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை வாழப்பாடி டிஎஸ்பி முத்துசாமியிடம் அளித்துள்ளனர்.

இது குறித்து அந்த மாணவியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, கடந்த மூன்றாண்டுகளாகவே கராத்தே மாஸ்டர் ராஜா பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு சில்மிஷம் செய்துவருவதாக தெரியவந்துள்ளது. இந்த மாணவி எட்டாம் வகுப்பு படிக்கும் போது இதுபோன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இந்த மாணவி பள்ளி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்து அந்த ஆசிரியை பள்ளி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் அதே பள்ளியில் அந்த கராத்தே மாஸ்டர் பணியாற்றி வந்துள்ளார்.

அந்த மாணவி மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். பள்ளியின் மேலாளரும் உரிமையாளருமான ஸ்டீபன் தேவராஜ் என்பவரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த மாணவி தற்போது இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் கருமந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுடுபட்டு தனியார் பள்ளி உரிமையாளரும், மேலாளருமான ஸ்டீபன் தேவராஜ் என்பவரை வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் ஆத்தூர் அருகே உள்ள சீலீயம்பட்டி கராத்தே மாஸ்டர் ராஜா என்பவரை கருமந்துறையில் பிடித்தனர்.

கருமந்துறை காவல் நிலையம் அருகே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் கராத்தே மாஸ்டர் ராஜாவை கொண்டுவந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் போது பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் இருந்து ஓடி வந்து அவரை ஆவேசத்தில் தாக்க முயன்றார்.

அருகில் உள்ள பொதுமக்களும் அவரை தாக்கினர். இதனால் கருமந்துறையில் 3 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவி வந்தது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!