சேலம் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பு மாவிலான் கிழங்கு, சீவல்பட்டை பறிமுதல்

சேலம் அருகே பல லட்ச ரூபாய் மதிப்பு மாவிலான் கிழங்கு, சீவல்பட்டை பறிமுதல்
X

சேலம் அருகே அரிசி ஆலையில் வனத்துறையால் கைப்பற்றப்பட்ட மாவிலான் கிழங்கு மற்றும் சீவல்பட்டை.

சேலம் அருகே அரிசி ஆலையில் தடைசெய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான மாவிலான் கிழங்கு மற்றும் சீவல்பட்டை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அடுத்து உள்ள பேளுர் சாலையில் குமரன் அரிசி ஆலையை குத்தகைக்கு எடுத்து ஏற்காட்டை சேர்ந்த ராமன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் நெல் உலர்த்தும் இடத்தில் வனத்துறையால் தடைசெய்யப்பட்ட மாவிலன் கிழங்கு மற்றும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சீவல்பட்டை இருப்பதாக சேலம் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற சேர்வராயன் தெற்கு சரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 15 டன் மாவிலான் கிழங்கு, சீவல் பட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய ஏற்காட்டை சேர்ந்த ராமன் என்ற நபரை தேடி வருகின்றனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மாவிலான் கிழங்கு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai healthcare products