கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி 600 மாணவர்களை சேர்த்து சாதனை

கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி 600   மாணவர்களை சேர்த்து சாதனை
X

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 600 மாணவர்களை சேர்த்து சாதனை படைக்கப்பட்டதை அடுத்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 600 மாணவர்களை சேர்த்து சாதனை எட்டப்பட்டுள்ளது.

சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கையில் புதுமையை புகுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பலவிதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துகின்றன.

கடந்த 2017- 2018ம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணு கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர்,8 உதவி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 425 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது நடப்பு ஆண்டில் 230 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 620 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, ஊர் மக்கள் பெருமைப்படுத்தினர். மேலும் 600வதாக சேர்ந்த மாணவர்கள் மூலமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Tags

Next Story