சேலம் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் விறு, விறு
சேலம் சிறப்பு முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்கள்.
சேலத்தில் தேர்தலைப் போல வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களில் திரளான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்றய தினம்கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலுள்ள 1235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என 1356 இடங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
இந்த முகாமில் பொதுமக்கள் காலை 7 மணி முதலே தேர்தலில் வாக்களிப்பதற்கு வருவது போல் ஆர்வத்துடன் வந்து கோவேக்சின், கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்கள் நேற்று வழங்கப்பட்ட தடுப்பூசிக்கான பூத் சிலிப்புடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.
மேலும் இந்த தடுப்பூசி போடும் பணியில் 18520 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாம்களை கண்காணிக்க 255 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu