/* */

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நெடுச்சாலைத்துறையினர் உடைத்து அகற்றினர்.

HIGHLIGHTS

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்
X

ஏர்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினர்.

சுற்றுலா தளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக அடிவாரத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாலை முதல் 5 மணி நேரம் போராடி பாறையை உடைத்து அகற்றினர். இந்தப் பணிகள் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மலைப்பாதையை கடக்க வேண்டுமென வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Updated On: 24 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...