பாறை வெடி வைத்து தகர்ப்பு: ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பாறை வெடி வைத்து தகர்ப்பு: ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்
X

ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

ஏற்காட்டில் ராட்சத பாறையை வெடி வைத்து அப்புற படுத்தும் பணி நடைபெறுவாதல் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலத்தளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 900 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது.

சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். பெரிய அளவிலான பாறை என்பதால் உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் பாறையில் வெடி வைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து சுமார் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பப்பட்டது. தொடர்ந்து வெடிக்கச் செய்த்ததில் பாறை வெடித்துச் சிதறியது. இதையடுத்து சாலையில் சிதறிய பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு தற்காலிமாக தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஏற்காட்டில் இருந்து மலைப்பாதை வழியாக சேலம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன்காரணமாக ஏற்காடு 20வது கொண்டை ஊசி வளைவு அருகே காவல்துறையினர் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தியதால் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெடித்துச்சிதறிய பாறை கற்களை பொக்லின் கொண்டு அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. முழுவதும் பாறைகள் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important in business