நள்ளிரவில் கார் கண்ணாடி உடைப்பு -போலீஸ் விசாரணை

நள்ளிரவில் கார் கண்ணாடி உடைப்பு -போலீஸ் விசாரணை
X

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நள்ளிரவில் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் வழக்கம் போல ஏற்காடு பேருந்து நிலையம் அருகே தனது கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையை திறக்க சென்றபோது முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஏற்காடு போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கோமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் கையில் கற்கள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலைகளில் சுற்றி திரிவதும், சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்ததும் பதிவாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!