பாலியல் சீண்டலில் பாதித்த சிறுமியை தாக்கிய போலீசார்:ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பாலியல் சீண்டலில் பாதித்த சிறுமியை தாக்கிய போலீசார்:ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த பாலியல் சீண்டலுக்குள்ளான சிறுமி.

போலீசார் தாக்கியதாக நடவடிக்கை எடுக்கக்கோரி பாலியல் சீண்டலில் பாதித்த சிறுமி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் அருகே வீராணத்தில் கடந்த 27 ம் தேதி 11 ஆம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வீராணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பெயரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சங்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தற்கொலைக்கு முயன்ற சங்கர் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக நேற்று காவல் நிலையம் வருமாறு அழைத்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், தன்னை தரக்குறைவாக பேசி தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மருத்துவ பரிசோதனைக்கு குறித்த நேரத்தில் வராததால் திட்டினோமே தவிர அடிக்கவில்லை என தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்