வாழப்பாடி அருகே மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமைப்பு

வாழப்பாடி அருகே  மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமைப்பு
X

சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

மயானத்திற்கு செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமித்ததால் இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் உறவினர்கள் போராட்டம்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கவர்கள்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி மனைவி நீலாம்பால் என்பவர் (50) உடல்நலக்குறைவால் காலமானார். உறவினர்கள் இறந்தவரின் உடலை தகனம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் விவசாயி ஒருவர் பாதையில் விறகுகளை அடுக்கி வைத்து பாதையை மறித்ததால் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இறந்தவரின் உடலை அங்கே சாலையில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போரட்டத்தில் ஈடுட்டவர்கள் உடலை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!