ஏற்காட்டில் உரிய அனுமதியின்றி 10 லாட்ஜ்களில் இயங்கிய மசாஜ் சென்டர்: போலீசார் அதிரடி..
Yercaud Massage Center
Yercaud Massage Center-ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். தற்போது. குளிர் காலம் என்பதால் கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரியில் இருந் தும், சென்னை, வேலுர். மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், ஏற்காட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஹோட்டலுடன் கூடிய லாட்ஜ்களில் அதிக அளவில் குவிகின்றனர்.
இந்த லாட்ஜ்களில் சிலவற்றில் ரசியமாக விபசாரமும், ஸ்பா என்னும் மசாஜ் சென்டர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்ப தாகவும் மாவட்ட எஸ்பி அபிநவ்விற்கு புகார்கள் வந்தன. இதன்பேரில்,ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் 2 தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.ஒவ்வொரு லாட்ஜ்களிலும் இருக்கும் மாசாஜ் சென்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அறைகளிலும் சோதனை நடத்தினர். சிறிய அளவில் ஆங்காங்கே செயல்படும் மசாஜ் சென்டர்களிலும் சோதித்தனர்.
இதில், 10 ஹோட்டல்கள் லாட்ஜ்களில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்களுக்கு முறையாக உரிய அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அனுமதியின்றி இயங்கியது. இதையடுத்து அந்த 10 மாசஜ் சென்டர் களும் தொடர்ந்து செயல்படதடை விதித்து டிஎஸ்பி தையல் நாயகி உத்தரவிட் டார். முறையாக அனுமதி பெற்றுதான், மசாஜ் சென்டர்களை நடத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண், ஆண் குழந்தைகளை வேலைக்கு அமர்த்த கூடாது என அறிவுறுத்தினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu