சேலம் அருகே ஏரி உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: கண்டுகொள்ளதாத அதிகாரிகள்

சேலம் அருகே ஏரி உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: கண்டுகொள்ளதாத அதிகாரிகள்
X

இடிந்து விழுந்த வீடுகள்.

சேலத்தில் பெய்த கனமழையால் காரைக்காடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி அதன் கரை உடைந்ததில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் 2 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.

மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்து, அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதியை எவ்வித அரசு அதிகாரிகளும் பார்வையிட்டு மீட்பு பணியை மேற்கொள்ளவில்லை அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!