ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
X

ஏற்காட்டில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

ஏற்காட்டில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் அனிதா ( 59). இவர் நர்சிங் படித்து விட்டு ஏற்காடு பிளியூர் கிராமத்தில் தன்னை மருத்துவர் என்று கூறி கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த ஏற்காடு தாசில்தார் பொன்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மாதையன் ஆகியோர் பிளியூர் கிராமத்துக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நர்சிங் படித்து விட்டு மருத்துவர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ஏற்காடு காவல்துறையினர் போலி மருத்துவர் அனிதாவை கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!