அராஜகம், பணத்தாலும் வெற்றிபெற்ற திமுக எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்: இபிஎஸ்
ஏற்காட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை இழந்தாலும் சேலம் மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாகவே வைத்துள்ளோம் என்றார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் மட்டும்தான் என்றும், 45 தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இழந்துள்ளோம் என்றார். அதிமுகவை பொறுத்தவரை ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்ட கட்சி. அதனால்தான் ஜனநாயக முறைப்படி நமது ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம்.
ஆனால் திமுக அராஜகத்தை பயன்படுத்தியும், பணத்தை கொடுத்தும் முறைகேடு செய்தும் வெற்று பெற்றுள்ளது. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று விமர்சித்தார். ஜெயலலிதா இல்லாத நிலையிலும் நாம் 66 இடங்களை வென்றுள்ளோம், அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கூட்டத்தில் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu