ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
X

ஏற்காட்டில் நிலவி வரும் பனி மூட்டம்.

ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.

இந்த நிலையில் இன்று வார விடுமுறை தினமாக இருப்பினும் கூட கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின.

மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்காடு வாழ் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!