அயோத்தியாபட்டினம் ஒன்றிய அதிமுக தலைவர் மீது நம்பிகையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
ஒன்றிய கவுன்சிலர்கள்.
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று இருந்த போதும், அப்போதைய அதிமுக ஆட்சியில், தலைவருக்கான தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பார்வதி என்பவரை அறிவித்தனர்.
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த தலைவர் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு உள்ளான நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்து இருந்தனர். அதன்படி சேலம் வருவாய் கோட்டச்சியர் விஷ்ணுவர்த்தினி முன்னிலையில், அயோத்தியாபட்டினம் ஒன்றிய அலுவலகத்தில், இன்று கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டு இருந்தது.
இதனையடுத்து, ஒன்றிய குழு அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில், திமுக காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த 16 பேர் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்துயிட்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மனாம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஒன்றிய குழு துணை தலைவரான திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தற்காலிக தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் விரைவில் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே அதிமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுகவினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அயோத்தியாபட்டினம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் கூறும் போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக பெரும்பான்மையாக இருந்த போதும், அப்போது ஆளுங்கட்சியாக இருந்ததால், அதிமுகவை சேர்ந்தவர் தலைவராக அறிவிக்கபட்டார். இதன் பின்னர் அவரது செயல்பாடுகள் சரி வர இல்லதா காரணத்தினால், அவர் மீது நம்பிகையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அந்த தீர்மானத்தின் மீது அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு தெரிவித்த காரணத்தினால், தீர்மானம் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக, தலைவர் பதவியை இழந்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu