ரோடு போடும் வரை தேர்தல் புறக்கணிப்பு, 18 கிராம மக்கள் அதிரடி

ரோடு போடும் வரை தேர்தல் புறக்கணிப்பு, 18 கிராம மக்கள் அதிரடி
X
சேலத்தில் சாலை போடும்வரை தேர்தலை புறக்கணிப்பதாக 18 கிராமமக்கள் அறிவித்து போஸ்டர் ஒட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் மாரமங்கலம் பஞ்சாயத்தில் கொட்டச்சேடு முதல் மேணங்குழிக்காடு வரை உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்றி தரும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

இந்த தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக கொட்டச்சேடு, செந்திட்டு, காளிக்காடு, பெரியமதூர், சின்னமதூர், பெலாக்காடு, சுண்டகாடு, கோவிலூர், மாரமங்கலம், கொம்புதூக்கி உள்ளிட்ட 18 கிராம மக்கள் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி லட்சுமி எஸ்டேட்டின் வழியாக சாலை அமைத்திட தடுக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!