ஏற்காட்டிற்கு செல்ல வேண்டாம்: சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
சேலம் மாவட்டத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக நீர் வரத்து ஏற்பட்டு முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி மேற்படி நீர் நிலைகளில் குளிப்பது நீச்சல் பழகுவது, செல்பி எடுப்பது, ஆறுகளை கடப்பது, விளையாடுவது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்காடு வட்டத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்காடு வட்டமலைப் பாதைகளில் ஆங்காங்கே நில சரிவுகள் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகின்றது . இந்நேர்வுகளில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அத்தியாவசிய நோக்கம் இன்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டிக்கு செல்வதை தற்போதைய சூழலில் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஏற்காடு மலைப்பாதையில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu