ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

பைல் படம்.

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கள்ள சாராயம் புழக்கத்தை ஒழித்து வருகின்றனர்.

அதன்படி குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட தப்பக்காடு பகுதியில் ஏற்காடு காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் பாலமுருகன் என்பவரது வீட்டின் பின்புறம் 3 பேரல்களில் சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!