அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ்-க்கு பிரசவம்; பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி

அரசு மருத்துவமனையில் ஐஏஎஸ்-க்கு பிரசவம்; பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி
X

ஐஏஎஸ் அதிகாரி தர்மலாஸ்ஸ்ரீ.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்குபெண் குழந்தை பிறந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் தாமரைக்கண்ணன் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் அடிப்படையில் நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை மகப்பேறு துறைத் தலைவர் சுபா தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்ததாக உதவி ஆட்சியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!