சேலத்தில் 4 ஆண்டுகளாக வீட்டுமனை வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலம் முற்றுகை

சேலத்தில் 4 ஆண்டுகளாக வீட்டுமனை வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலம் முற்றுகை
X

வீட்டுமனை பிரித்து வழங்கப்படாததை கண்டித்து பட்டா வாங்கிய பயனாளிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகையிட்டனர்.

சேலத்தில் 120 பேருக்கு பட்டா வழங்கி 4 ஆண்டுகளாகியும் வீட்டுமனை வழங்காததால் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரிப்பட்டி ஊராட்சியில் கடந்த 2017 ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள நான்கு ஏக்கர் இடத்தை 120 பயனாளிகளுக்கு தலா ஒன்றரை சென்ட் வீதம் வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளது.

ஆனால் பட்டா வழங்கி 4 ஆண்டுகளாகியும் நில அளவீடு செய்து வீட்டுமனை பிரித்து வழங்கப்படவில்லை. இதுகுறித்து பட்டா வாங்கிய பயனாளிகள் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால் அரசு தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பயனாளிகள் காரிப்பட்டி ஊராட்சி தலைவர் மனோசூரியன் தலைமையில் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகள் அனைவருக்கும் உரிய வீட்டுமனையைப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story