மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

இளங்கோவன்.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் வசித்து வருபவர் இளங்கோவன். இவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் இளங்கோவனுடைய வீடு, கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாகவும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்துள்ளார். தேர்தலின் போது ஆயிரம் கோடி ரூபாய் இதன் மூலம் செலவு செய்ததும் தெரிய வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலதுகரமாக மிக முக்கிய பிரமுகராக செயல்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் இளங்கோவனுக்கு சொந்தமான வீடுகள் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் கல்வி நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!