கோவில் விழாவிற்கு அனுமதி காேரி முற்றுகை: பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு

கோவில் விழாவிற்கு அனுமதி காேரி முற்றுகை: பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு
X

சேலம் அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென சாமி ஆடிய பெண்கள்.

சேலம் அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சேலம் அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். திடீரென பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வி.குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் மதுரைவீரன் கோவிலில் கடந்த 13 ஆண்டுகளாக வழிப்பாதை பிரச்சினை காரணமாக எவ்வித திருவிழாவும் நடக்கவில்லை என கூறப்படுகிறது. வழிப்பாதை பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் கோவில் திருவிழாவை நடத்த கோரி வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 1 மாதத்தில் வழிப்பாதை பிரச்சனையை முடித்துக் கொள்ளுமாறு வட்டாட்சியர் வரதராஜன் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பொதுமக்கள் உடனடியாக திருவிழா நடத்த அனுமதி கேட்டு 100 க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது 10 க்கும் மேற்பட்ட பெண்கள் மேள தாளம் ஏதும் இல்லாமல் திடீரென சாமி ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!