போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன்  தீக்குளிக்க முயற்சி
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்.

சேலத்தில் காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள அனுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் குமார். இவரிடம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மனைவியின் குடும்பத்தார் பெற்றுக் கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக கூறி, குமார் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பணத்தை மீட்டுத் தரக் கோரி அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், பணத்தைப் பெற்று தர நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்கள் மீீீீதே பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடுவேன் என்று காவல்துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ai and business intelligence