ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்த போலீசார். 

சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு பகுதியில் போடப்பட்டிருந்த, 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

சேலம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்காடு அருகே கொம்மக்காடு கிராமத்தில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, ரூரல் டிஎஸ்பி தையல்நாயகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில், ஏற்காடு காவல்நிலைய போலீசார் நேற்றிரவு அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில், 1500 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார், சாராய ஊறல் போட்டது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!