டாஸ்மாக் ஊழியருடன் மதுபிரியர் வாக்குவாதம்: வலைத்தளங்களில் வீடியாே வைரல்

டாஸ்மாக் ஊழியருடன் மதுபிரியர் வாக்குவாதம்: வலைத்தளங்களில் வீடியாே வைரல்
X

வலைத்தளங்களில் பரவி வரும் விற்பனையாளருடன் மதுபிரியர் வாக்குவாதம் செய்யும் வீடியாே.

சேலத்தில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த விற்பனையாளருடன் மதுபிரியர் வாக்குவாதம். வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

சேலத்தில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த விற்பனையாளருடன் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சேலம் உடையாப்பட்டி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் விற்பனையாளர் எடுத்துக் கொண்டதால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மதுப்பிரியர் மதுபானத்தை வாங்கும் போது கூடுதலாக 10 ரூபாயை விற்பனையாளர் எடுத்துக் கொண்டதால், மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

உடனே விற்பனையாளர் மதுபாட்டிலை எடுத்து உள்ளே வைத்துக் கொள்கிறார். பின்னர் மதுப்பிரியருக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் கூடுதலாக வசூலித்த பத்து ரூபாய் பணத்தையும், மதுபாட்டிலையும் எடுத்து கொடுக்கிறார்.

தமிழக அரசு கூடுதலாக மதுபானத்திற்கு பணம் வசூலிக்க கூடாது என்று அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் விற்பனையாளர் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததால் வாக்குவாதம் ஏற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்