சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்
X

கன்னங்குறிச்சி பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுகவினர்.

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடக்கிறது. இதனிடையே வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவோர் தங்களது வேட்பு மனுவை சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு மற்றும் அயோத்தியாபட்டணம் ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
marketing ai tools