ஏற்காட்டில் 45 நிமிடத்தில் 21 கி.மீ. பாராசூட்டில் பறந்து அடிவாரம் வந்த இளைஞர்

ஏற்காட்டில் 45 நிமிடத்தில் 21 கி.மீ. பாராசூட்டில் பறந்து அடிவாரம் வந்த இளைஞர்
X

ஏற்காட்டில் இருந்து மலை அடிவாரம் வரை பாராசூட்டில் பறந்த இளைஞர். 

ஏற்காட்டில் இருந்து மலை அடிவாரம் வரை 21 கிலோமீட்டர் 45 நிமிடத்தில் பாராசூட்டில் பறந்து வந்த இளைஞர்.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். பட்டதாரியான இவர் தற்போது லடாக் பகுதியில் தனியார் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இந்த பயிற்சி மையத்தில் பாராசூட் பயணம் செய்வது எப்படி கடலில் நீச்சல் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தரப்படுகிறது. சில வருடத்திற்கு முன்பு ராஜேஷ் பாராசூட் பயிற்சி பெற்று பலமுறை இமாச்சல பிரதேசத்தில் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து மலை அடிவாரம் வரை பாராசூட்டில் பறக்க முடிவுசெய்து ஏற்காடு லேடிஸ் சீட் பகுதியிலிருந்து பாராசூட்டில் பரந்த இளைஞர் ராஜேஷ் 21 கிலோமீட்டர் 45 நிமிடத்தில் பயணித்து ஏற்காடு மலையடிவார பகுதியில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்காவில் தரையிறங்கினார்.

தரை இறங்கிய இளைஞருக்கு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். ஏற்காட்டில் இருந்து பாராசூட்டில் பறந்து வந்த இளைஞரை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!