சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தீக்குளிக்க முயற்சித்த பொன்மலர்.
சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்மலர் என்ற இளம்பெண், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 5 மாத கைக் குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை மீட்டு காவல்துறையினர் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோல் சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தனது மகனுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், வள்ளியம்மாளின் சகோதரர் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தில் இருந்து நிலத்தை கேட்டதற்கு தாய் மற்றும் வள்ளியம்மாள் ஆகிய இருவரையும் அடித்துச் சித்ரவதை செய்வதாக புகார் தெரிவித்தார்.
மேலும் நிலத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வள்ளியம்மாளின் சகோதரரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu