ஏற்காடு தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு. 8 மனுக்கள் நிராகரிப்பு

ஏற்காடு தொகுதியில்  13  மனுக்கள் ஏற்பு. 8 மனுக்கள் நிராகரிப்பு
X
சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடி தனி தொகுதியில் 13 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

ஏற்காடு (பழங்குடி தனி) தொகுதியில், அதிமுக வேட்பாளர் கு.சித்ரா, திமுக வேட்பாளர் சி. தமிழ்ச்செல்வன்,தேமுதிக வேட்பாளர் சி.குமார், ஐஜேகே வேட்பாளர் தி.துரைசாமி, நாம் தமிழர் வேட்பாளர் ஜோதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராமசாமி மற்றும் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளர்கள், 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சேலம் மாவட்ட துணை ஆட்சியர் பி.கே. கோவிந்தன் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, ஐஜேகே, நாம் தமிழர்,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் கூடுதலாக தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள், மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்பட 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!