உலக ஈர நில வார விழா புகைப்பட போட்டி: மாணவர்கள், போட்டியாளர்களுக்கு அழைப்பு

உலக ஈர நில வார விழா புகைப்பட போட்டி: மாணவர்கள், போட்டியாளர்களுக்கு அழைப்பு
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் உலக ஈர நில வார விழா புகைப்பட போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உலக ஈர நில வார விழா ஜனவரி 18.01.2022 முதல் 24.01.2022-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி, சேலம் மாவட்டத்தில் ஈர நிலங்கள் தொடர்பான புகைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக வரும் 24-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈரநிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்பட போட்டியில் பங்கேற்கலாம். இப்புகைப்பட போட்டியில் Group A - XI and XII School Students, Group B - College Students, Group C - Wetland Mitras, Group D - Private Individuals என்ற வகைகளில் போட்டியாளர்கள் பங்கேற்கலாம்.

புகைப்பட போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஈர நில நண்பர்கள் ஈர நிலங்கள் தொடர்பான புகைப்படங்களை வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் sImwlpc2022@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போட்டியில் கலந்து கொண்டவர்களின் பெயர், வயது, முகவரி, அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி, பள்ளி / கல்லூரி முகவரி போன்ற விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர் களை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான தணிக்கை குழு தேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்தவர்களின் பட்டியலை தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசளிப்பு நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

எனவே ஈர நிலம் குறித்து இணையதளம் வாயிலாக நடைபெறும் புகைப்பட போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!