/* */

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 79 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 55.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 55.00 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.10 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 21 April 2024 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!