மேட்டூர் அணை நீர்மட்டம் 43.33 அடியாக சரிவு..!

மேட்டூர் அணை நீர்மட்டம் 43.33 அடியாக சரிவு..!
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 43.52 அடியிலிருந்து 43.33 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 43.52 அடியிலிருந்து 43.33 அடியாக சரிந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்க அளவு 120 அடியாகும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.12) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 404 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.13) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 392 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 43.52 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 43.33 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 13.86 டிஎம்சியாக உள்ளது. இதே போல், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1,500 கன அடியாக நீடிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!