மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஏப்.,4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.98 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஏப்.,4) இன்று காலை 8 மணி நிலவரப்படி 58.98 அடியாக சரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாமல் வறண்டு உள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 500 கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 300 கன அடியாக சரிந்தது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 16 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு வெறும் 5 கன அடியாகவும், இன்று காலை 15 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 59.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 58.98 அடியாகவும், நீர் இருப்பு 23.93 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!