மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.6) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.88 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.6) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.88 அடியாக சரிந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டதாகும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட் டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று 3வது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூன்.5) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 286 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.6) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 239 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 2,100 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை 45.18 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 44.88 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 14.73 டிஎம்சியாக உள்ளது.

மேலும், மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself