/* */

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.,15) இன்று காலை 8 மணி நிலவரப்படி 56.23 அடியாக உள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

மேட்டூர் அணை.

Mettur Dam Water Level

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.,15) இன்று காலை 8 மணி நிலவரப்படி 56.23 அடியாக உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 56.43 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 56.23 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.96 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 15 April 2024 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!