மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 217 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 217 கன அடியாக சரிவு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 402 கன அடியிலிருந்து 217 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 402 கன அடியிலிருந்து 217 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் வினாக்கு 1,200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 402 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.22) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 217 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று காலை 49.05 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 48.76 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 17.04 டிஎம்சியாக உள்ளது. இதனிடையே, மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 9.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!