சேலம் மாவட்டத்தில் 195 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் 195 வாக்குச்சாவடிகளில் 24 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை காலியாக இருந்த 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 11 பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமிருந்த 24 பதவிகளுக்கு 195 வாக்குச்சாவடிகளில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 58 வாக்குச்சாவடிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story