குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றியமைக்கப்படும்: திமுக வேட்பாளர்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இதன்படி வீரபாண்டி சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் சேலம் இரும்பாலை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றி அமைக்கப்படும்.
65 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக கொரானா தடுப்பூசி போடப்படும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும். தனது சட்டமன்றத் தொகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற இலவசமாக டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் தான் இன்றளவும் மக்கள் பயன் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். எனவே அது போன்ற திட்டங்கள் மீண்டும் தொடர மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பேட்டியின் போது சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரமணி ராஜா, ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu