ஜாதிச்சான்றிதழ் கேட்டு கலெக்டர் ஆபீஸில் மலைவாழ் மக்கள் திடீர் தர்ணா

ஜாதிச்சான்றிதழ் கேட்டு கலெக்டர் ஆபீஸில் மலைவாழ் மக்கள் திடீர் தர்ணா
X

ஜாதி சான்றிதழ் கேட்டு, மலைவாழ்மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலத்தில், ஜாதிச்சான்றிதழ் கேட்டு மலைவாழ்மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஜருகுமலை, குரால்நத்தம், கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் சுமார் 7,000 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. பழைய முறையில் இவர்களுக்கு, மலைவாழ் பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் முறையில் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது, முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்; மலைவாழ் பழங்குடியினருக்கு பழைய முறைப்படி அட்டையிலேயே சாதிச் சான்றிதழ் வழங்க கோரியும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசால் கிடைக்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, ஜாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறி, மலைவாழ்மக்கள், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் நேரடியாக ஜாதி சான்றிதழ் கிடைக்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!