இருதரப்பு பிரச்னை ஒரு தரப்பு சாலை மறியல்

இருதரப்பு பிரச்னை ஒரு தரப்பு சாலை மறியல்
X
பண்டிகை நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடம் ஏற்பட்ட பிரச்னையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பலப்பட்டரை மாரியம்மன் கோவில் பண்டிகையை நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே 2018இல் இருந்து மோதல் போக்கு நீடிக்கிறது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நடப்பாண்டு பண்டிகையை நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு கோவில் வளாகத்தில் இருதரப்பினரும் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு தரப்பினர் சங்ககிரி பிரதான சாலையில் கொண்டலாம்பட்டி சந்தை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின் பண்டிகை நடத்துவது தொடர்பாக போலீசார் வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!