மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்சிறை: சேலம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை  கொலை செய்த கணவருக்கு ஆயுள்சிறை: சேலம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
X

லத்தில் திருமணமாகி மூன்று மாதங்களில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், கணவருக்கு சேலம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள மூங்கில் ஏரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(28). இவர், ராசிபுரம் தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் உமா மகேஸ்வரியை கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் தினேஷ்குமார், திருமணமான மூன்று மாதங்களில் அவரது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுதொடர்பாக , உமா மகேஸ்வரியின் தந்தை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிந்து தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!