மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்த சேலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கலந்து கொண்டார். மேலும் இந்த மகா சபை கூட்டத்தில் புதிதாக சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறும்போது, தினமும் ஏரிவரும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கச்சா எண்ணை விலை உயர்வுக்கு தகுந்தார் போல் விலை ஏறினால் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கச்சா எண்ணை விலை உயர்வுடன் மத்திய மாநில அரசுகள் கூடுதலாக வரிவிதித்து எங்களை நஷ்டத்திற்குள்ளாக்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இல்லை என்பது வருக்கமளிக்கிறது.
ஒளிரும் பட்டை 11 நிறுவனங்களிடம் வாங்கிக்கொள்ளலாம் என்ற மத்திய அரசு கடந்த மாதம் 6ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை இதுவரை மாநில அரசு அமல்படுத்தவில்லை. இதனை விரைவில் அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.
மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.மத்திய அமைப்பும், எங்களுக்கு சிம்டாவும் அறிவுரை கூறும் பட்சத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவோம். ஏற்கனவே அறிவித்த ஏற்றுகூலி, இறக்கு கூலி தரமுடியாது என்ற அறிவிப்பை வியாபாரிகளிடம் விளக்க ம்தேதி நடைபெறும் வியாபாரிகள் சங்கத்தின் விழுப்புரம் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளோம்.
டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்தமுடியாத நிலை உள்ளது. மத்திய அரசு சிறு முதலாளிகளை ஒழித்துவிட்டு கார்பரேட்டுகளுக்கு வழிவகுக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.அப்படி கார்பரேட்டுகள் வந்தால் அவர்கள் விருப்பப்படிதான் வாடகை நிர்ணயம் செய்வதும், அவர்கள் விருப்பப்படி அரசு நடக்கும். எங்களை போன்ற சிறு முதலாளிகளால்தான் இந்த தொழில் சரியாக நடக்கிறது என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu