சேலம் அருகே கார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சேலம் அருகே கார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
X

சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

சேலம் அருகே கார் விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், அவரது நண்பர் அருண்குமாருடன் பழனிக்கு சென்றுவிட்டு,கடந்த 25ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கண்மூடித்தனமாக காரை இயக்கியதால் சாலையின் ஓரம் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் படுகாயமடைந்த அஜித்குமார் சேலம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று நிலையில், உயர் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர் வினோத், கார் ஓட்டுனர் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உட்பட நான்குபேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, கார் ஓட்டி வந்த ஓட்டுனரின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.அவரது உடல் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!