சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
X
பைல் படம்.
சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின், ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் மதியம் 3 மணி வரை வாக்களிக்கும் உறுப்பினர்கள் எவரும் வரவில்லை என்பதால் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் , திமுக 5 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, அதிமுக 6, பாமக 1 என மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ள நிலையில் யாரும் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story