மறைந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு கனிமொழி எம்.பி., நேரில் அஞ்சலி

மறைந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு கனிமொழி  எம்.பி., நேரில் அஞ்சலி
X

வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு கனிமொழி எம்.பி., நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனுமாகிய வீரபாண்டி ராஜா இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 58 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த வீரபாண்டி ராஜா திடீரென உயிரிழந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜாவின் மறைவை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜாவின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கவிஞர் கனிமொழி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வீரபாண்டி ராஜாவின் உடல் நாளை காலை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தி.மு.க.,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!