8 வழிச்சாலை திட்டத்தை எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்: பட்டாசு வெடித்து விவசாயிகள் உற்சாகம்

8 வழிச்சாலை திட்டத்தை எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்:  பட்டாசு வெடித்து விவசாயிகள் உற்சாகம்
X

விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சேலம் பூலாவரி பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை, சேலத்தில் பட்டாசுகள் வெடித்து விவசாயிகள் கொண்டாடினர்.

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கண்டித்து, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஐந்து மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள், கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந் நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடிய நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். சேலம் அருகே பூலாவரி பகுதியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விரைவில் முதலமைச்சர் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வார் என எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!