திமுக ஆட்சியில் ஜெனரேட்டர் போட்டு வியாபாரம் : அதிமுக வேட்பாளர் சூடு
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் இன்றைய தினம் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 32 மற்றும் 33 ஆகிய கோட்டங்களுக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது அக்ரஹாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், நகை கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளிலும், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். பூ மார்க்கெட்டிற்கு சென்ற வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு அங்குள்ள பூ வியாபாரிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
முன்னதாக கன்னிகாபரமேஸ்வரி கோவில் அருகில் மக்கள் முன் பேசிய வேட்பாளர் வெங்கடாசலம், 2011ம் ஆண்டுக்கு முன் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருந்ததால், வியாபாரிகள் கடைகளில் ஜெனரேட்டரை வைத்துதான் வியாபாரம் செய்து வந்தனர். அதற்காக கூடுதல் செலவும் செய்து வந்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்து, தடையில்லா மின்சாரம் வழங்கிய காரணத்தால் வியாபாரிகள் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.
இந்த பிரசாரத்தின்போது சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணியை சேர்ந்த பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu