வீரபாண்டி எம்எல்ஏவின் தந்தை மரணம்: எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி

வீரபாண்டி எம்எல்ஏவின் தந்தை மரணம்: எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி
X

சேலம் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தந்தை முத்துசாமி.

சேலம் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தந்தை முத்துசாமி இன்று மதியம் மரணமடைந்தார்.

சேலம் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த ராஜமுத்து. இவரது தந்தை 80 வயது கொண்ட முத்துசாமி இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் கொண்டலாம்பட்டி அருகே காட்டூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, உயிரிழந்த முத்துசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தந்தையின் மறைவால் வாடும் சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

இதேபோன்று ஜெபேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மணி, ஜெய்சங்கரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் முத்துசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!