/* */

சேலம்: திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறி வழங்கல்!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேரின் குடும்பங்களுக்கு, ரூ. 5 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறி தொகுப்பினை, அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

HIGHLIGHTS

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார நிலைய பணியாளர்கள், மின்சார வாரியத்தில் பணி புரிவோர் என, முன்களப் பணியாளர்கள் 1100 பேரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சேலம் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலாசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு கொரோனா நிவாரணமாக, அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மொத்தம் 1100 குடும்பங்களுக்கு, 5 லட்ச ரூபாய் மதிப்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

இதேபோல், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். வீரபாண்டி ஒன்றிய திமுக சார்பில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் இந்த செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Jun 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா