தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்-திமுக வேட்பாளர்

தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்-திமுக வேட்பாளர்
X

தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கூறினார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் தருண் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என பல தரப்பு மக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார். இன்று மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியில் துவங்கி வட்டமுத்தான்பட்டி, ஆண்டிபட்டி, வேடுகத்தாம்பட்டி ,திருமலைகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வீரபாண்டி தொகுதி எவ்வித முன்னேற்றமும் அடைய வில்லை எனவும், நடைபெறும் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரித்த அவர் திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொகுதியில் முழுமையாக நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!